இந்த வருடத்தின் பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களாக ரஜினியின் `ஜெயிலர்' மற்றும் கமல்ஹாசனின் `இந்தியன் 2'
இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ரஜினியின் "ஜெயிலர்" மற்றும் கமல்ஹாசனின் "இந்தியன் 2" ஆகியவை அடங்கும். ஜெயிலரில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். நெல்சன் இயக்கியுள்ளார்.
ரஜினிகாந்த் தனது 169வது படத்தில் முத்துவேல் பாண்டியன் வேடத்தில் நடிக்கவுள்ளார். பல்வேறு கட்டப் பணிகள் நடைபெற்று வரும் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 80% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சொல்கிறார்கள். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது.
இந்த படமும் காலா, பேட்ட, தர்பார் போன்ற ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களுக்காக காத்திருக்கிறார்கள்.
“விக்ரம்” படத்தின் வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் தற்போது “இந்தியன்-2” படத்தில் நடித்து வருகிறார், மேலும் இதுவும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் படம். "இந்தியன் 2" படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. விபத்து, உயிரிழப்பு, தயாரிப்பு நிறுவனத்துடன் மோதல் என படப்பிடிப்பில் தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் படம் கைவிடப்பட்டதாகத் தோன்றியது. தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி முழு வீச்சில் நடத்தி வருகின்றனர்.
கமல்ஹாசன் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இதில் காஜல் அகர்வால், ராகுல்பிரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் "இந்தியன்-2" படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ரஜினியின் "ஜெயிலர்" மற்றும் கமல்ஹாசனின் "இந்தியன்-2" இரண்டும் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேரிடையாக மோதாமல் தனியாக வருவதையும் ரசிக்கிறார்கள்.